Thursday, July 23, 2015
ரேசன் கார்டு
புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ?
புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையோர் யார் ?
தனிக் குடும்பமாக உள்ள இந்திய குடிமக்கள்கள் அனைவர்களும் தகுதியுடையோர் ஆவார்கள்.
குடும்ப அட்டை பெற விண்ணப்பம் படிவம் எங்கு கிடைக்கும் ?
தமிழக அரசு விண்ணப்ப படிவங்களை
ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்னையித்துள்ளது. இவை அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும் மற்றும் ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளிலும் கிடைக்கும்.
மேலும் http://www.tn.gov.in/tamiltngov/appforms/ration_t.pdf என்ற அரசு தளத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்ப படிவத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும் ?
அந்தந்த தாலுக்கா அலுவலங்களில் உள்ள வட்ட உணவுப் பொருள் வழங்கல் அதிகாரி [ TSO ] அவர்களிடம் தாக்கல் செய்யவேண்டும்.
விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் எவை ?
விண்ணப்ப படிவத்தில் அதில் கோரப்பட்ட விவரங்கள் அனைத்தையும் பூர்த்திசெய்து கையொப்பம் இட வேண்டும். முழுமையற்ற படிவம் நிராகரிக்க வாய்ப்புகள் அதிகம்.
தேவையான ஆவணங்கள் :
1. இருப்பிட சான்று
2. தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை
3. வீட்டு வரி / மின்சார கட்டணம் செலுத்திய / தொலைப்பேசி கட்டண போன்றவைகளின் ஏதாவது ஒரு ரசீதுகள் / வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் / பாஸ்போர்ட் நகல் [ இதில் ஏதாவது ஓன்று மட்டும் போதுமானவை ]
4. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கு அதிகாரியிடம் [ TSO ] பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.
5. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் அதற்கான ‘குடும்ப அட்டை இல்லா’ சான்று.
6. எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர்.
7. விண்ணப்பதாரரின் தனது விண்ணப்பம் குறித்த தகவல்கள் பெற இலகுவாக தங்களின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யவும். அல்லது சுய முகவரியிட்ட தபால் தலையுடன் கூடிய தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை இணைக்கலாம்.
மனுதாரர் தனது விண்ணப்பத்தின் முடிவினை அறிந்து கொள்ள முடியுமா ?
1. தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தின் பேரில் 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க அல்லது மனுவின் முடிவை தெரிவிக்க கால நிர்ணயம் செய்துள்ளது.
2. வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து மனு பெறப்பட்ட நாளிலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் தணிக்கை அதிகாரிகளால் மனுதாரரின் விண்ணப்பத்தின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள மனுதாரரின் வீட்டிற்க்கே வந்து ஆய்வு செய்வார்கள்.
3. விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகை சீட்டினை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும்.
புதிய குடும்ப அட்டை பெற கட்டணம் உள்ளதா ?
ரூ 5 /- கட்டணம் நிர்ணயித்து. இந்த தொகையை உணவு வட்ட வழங்கல் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
அணுக வேண்டிய முகவரி :
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி [ DSO ] அவர்களை அணுகி கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
மேலும் தாலுக்கா அலுவலகத்தில் உள்ள வட்ட உணவு வழங்கல் அதிகாரி [ TSO ] அவர்களை அணுகி கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
குறிப்பு :
புதிய குடும்ப அட்டை பெற வேண்டி இடைத் தரகர்களிடம் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் லஞ்சம் கொடுப்பது இந்திய சட்டப்படி குற்றமாகும்.
Saturday, June 6, 2015
அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டம்
- நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான இலவச கல்வி அளிப்பது மத்திய மாநில
அரசுகளின் கடமையாகும்
- அரசுகள் தன் கடமையிலிருந்து தவறிவிட்டது
- அரசு பள்ளிகளிளின் கல்விதரம் படுபாதாளத்தில் உள்ளது
- தனியார் பள்ளியைச் சார்ந்து இருக்க வேண்டிய சூழல் திணிக்கப்படுகிறது
- கல்வி வியாபாரம் மயமாகிவிட்டது
- விரைவாக அதிக பணம் ஈட்டும் வியாபார துறை இன்று கல்வி துறையாகும்
- 100% இலவச கல்வி அளிக்க வேண்டிய அரசுகள் இன்று கண் துடிப்பாக RTE
எனப்படும் கட்டாய கல்வி சட்டத்தை இயற்றயுள்ளது
- 2011ம் ஆண்டு முதல் இச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை
மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கப்படுகிறது
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி
- இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் மூலம் தனியார் மெட்ரிக் மற்றும் CBSE /
ICSE பள்ளிகளில் ஏழை மாணவர்கள் கல்வி கட்டணம் எதுவும் இன்றி 8-ம் வகுப்பு
வரை இலவசமாக கல்வி பயிலுவதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் 25% இடங்கள்
ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான கல்வி கட்டணத்தை மத்திய மாநில
அரசாங்கங்கள் செலுத்திவிடும்.
- இச்சட்டத்தின் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏழை மாணவர்களுக்கென
தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், பெற்றோர்களிடம்
சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் பெரும்பாலான பள்ளிகூடங்கள் ஏழை
மாணவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்தவில்லை.
- எந்தெந்த பள்ளிகளில் சேர்க்கலாம்?
- அனைத்து மெட்ரிக், CBSE/ICSE தனியார் சுயநிதி பள்ளிகள் (சுயநிதி
சிறுபான்மை பள்ளி நீங்கலாக),
- LKG மற்றும் முதல் வகுப்பு - ஒரு கி.மீ சுற்றளவிற்குள் அமைந்த பள்ளிகள்.
- ஆறாம் வகுப்பு - மூன்று கி.மீ சுற்றளவிற்குள் அமைந்த பள்ளிகள்
- விண்ணப்பங்கள் எங்கு பெறலாம்?
- பள்ளி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்
அலுவலகம் மற்றும் துவக்க கல்வி அலுவலகம்.
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 18. 05. 2014
- யாரெல்லாம் பயன்பெற முடியும்?
- 2 லட்சத்திற்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள நலிந்த பிரிவைச்
சேர்ந்தவர்களின் குழந்தைகள், அனாதைகள், எஸ்.சி, எஸ்.டி, எம்.பி.சி ,
பி.சி வகுப்பினர், திருநங்கைகள், எச் ஐ வியால் பாதிக்கப்பட்டோர்,
துப்புரவாளர்கள், மாற்று திறனாளிகள் மற்றும் விதவைகளின் குழந்தைகள்.
- தேவையான ஆவணங்கள் என்ன?
- வருமான சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் பிறப்பு சான்றிதழ்.
- மேலதிக விபரம் மற்றும் புகார்களுக்கு:
- Directorate of Matriculation Schools
- தொலைபேசி: 044 - 28270169
- SMS: 9442144401, 9443574633
E-mail : dmschennai2010@gmail.com
By
Thoufeeq Ahamed m.com,M.A.journalist.
State committee member
campus front of india
Tamilnadu.
அரசுகளின் கடமையாகும்
- அரசுகள் தன் கடமையிலிருந்து தவறிவிட்டது
- அரசு பள்ளிகளிளின் கல்விதரம் படுபாதாளத்தில் உள்ளது
- தனியார் பள்ளியைச் சார்ந்து இருக்க வேண்டிய சூழல் திணிக்கப்படுகிறது
- கல்வி வியாபாரம் மயமாகிவிட்டது
- விரைவாக அதிக பணம் ஈட்டும் வியாபார துறை இன்று கல்வி துறையாகும்
- 100% இலவச கல்வி அளிக்க வேண்டிய அரசுகள் இன்று கண் துடிப்பாக RTE
எனப்படும் கட்டாய கல்வி சட்டத்தை இயற்றயுள்ளது
- 2011ம் ஆண்டு முதல் இச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை
மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கப்படுகிறது
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி
- இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் மூலம் தனியார் மெட்ரிக் மற்றும் CBSE /
ICSE பள்ளிகளில் ஏழை மாணவர்கள் கல்வி கட்டணம் எதுவும் இன்றி 8-ம் வகுப்பு
வரை இலவசமாக கல்வி பயிலுவதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் 25% இடங்கள்
ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான கல்வி கட்டணத்தை மத்திய மாநில
அரசாங்கங்கள் செலுத்திவிடும்.
- இச்சட்டத்தின் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏழை மாணவர்களுக்கென
தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், பெற்றோர்களிடம்
சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் பெரும்பாலான பள்ளிகூடங்கள் ஏழை
மாணவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்தவில்லை.
- எந்தெந்த பள்ளிகளில் சேர்க்கலாம்?
- அனைத்து மெட்ரிக், CBSE/ICSE தனியார் சுயநிதி பள்ளிகள் (சுயநிதி
சிறுபான்மை பள்ளி நீங்கலாக),
- LKG மற்றும் முதல் வகுப்பு - ஒரு கி.மீ சுற்றளவிற்குள் அமைந்த பள்ளிகள்.
- ஆறாம் வகுப்பு - மூன்று கி.மீ சுற்றளவிற்குள் அமைந்த பள்ளிகள்
- விண்ணப்பங்கள் எங்கு பெறலாம்?
- பள்ளி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்
அலுவலகம் மற்றும் துவக்க கல்வி அலுவலகம்.
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 18. 05. 2014
- யாரெல்லாம் பயன்பெற முடியும்?
- 2 லட்சத்திற்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள நலிந்த பிரிவைச்
சேர்ந்தவர்களின் குழந்தைகள், அனாதைகள், எஸ்.சி, எஸ்.டி, எம்.பி.சி ,
பி.சி வகுப்பினர், திருநங்கைகள், எச் ஐ வியால் பாதிக்கப்பட்டோர்,
துப்புரவாளர்கள், மாற்று திறனாளிகள் மற்றும் விதவைகளின் குழந்தைகள்.
- தேவையான ஆவணங்கள் என்ன?
- வருமான சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் பிறப்பு சான்றிதழ்.
- மேலதிக விபரம் மற்றும் புகார்களுக்கு:
- Directorate of Matriculation Schools
- தொலைபேசி: 044 - 28270169
- SMS: 9442144401, 9443574633
E-mail : dmschennai2010@gmail.com
By
Thoufeeq Ahamed m.com,M.A.journalist.
State committee member
campus front of india
Tamilnadu.
தேசிய நதிநீர் இணைப்பு திட்டம்
தேசிய நதிநீர் இணைப்பு திட்டம்
இந்தியாவில் * அனைத்து நதிகளையும் தேசியமயம் ஆக்கி, * இந்திய நதிகளை இணைத்து அதன் மூலம்* தேசிய நீர்வழிச்சாலையை அமைத்தால் வறுமை, வெள்ளம்,வறட்சி,வேலைவாய்ப்பின்மை, மின்சாரத் தட்டுப்பாடு இவை அனைத்திலிருந்தும் விடுதலை.
குடிநீர்: 60 கோடி மக்களுக்கு தடையில்லாமல் காலம் முழுவதும் குடிநீர் கிடைக்கும். / விவசாயம்: 15 கோடி ஏக்கர் நிலங்கள் கூடுதலாக பாசன வசதி பெற்று விவசாயம் சிறக்கும். 2050- ல் தேவையான உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடையும். / நிலத்தடி நீர்: இந்தியாவின் பாதித்த பகுதிகளில் எல்லாம் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
மின்சாரம்: 60000 மெகாவாட் மாசற்ற புனல் மின்சாரம் கிடைக்கும். / வேலை வாய்ப்பு: 25 கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகும். / நீர்வழிச்சாலை: 15000 கி.மீ.நீளத்திற்கு தேசிய நீர்வழிச்சாலை அமையும். சிறிய பயணிகள் கப்பல் நாடு முழுவதும் உலாவரும்.
எரிபொருள்: வருடம் 1,50,000 - கோடி ரூபாய் எரிபொருள் குறைப்பின் மூலம் சேமிக்கப்படும். / உலக வெப்பமயம்: கால்வாய் நெடுகிலும் மரங்கள் வளர்த்தல், புதிய காடுகள் வளர்த்தல் மூலம் நாட்டின் வெப்பம் தணிந்து சுற்றுப்புற சூழல் சீர்படும். / வெள்ளம்: ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கு கட்டுப்பாட்டுக்குல் கொண்டுவரப்படும்.
வறட்சி : வெள்ளநீர் வறட்சிப் பகுதிகளுக்கு கொண்டு செல்வதால் வறுமையும் வறட்சியும் இல்லாமல் போகும். / சுற்றுலா: இந்திய சுற்றுலாத்துறை உலக அளவில் இடம் பிடிக்கும். சாதனை : இந்தியா முழுவதும் நீர்வளம் பெற்று, நிலவளம் சிறப்புறப் பெற்று, வறுமை நீங்கி, 2025 -ல் வலிமைமிகு வல்லரசாய் நாடு உருவாகும். வறட்சி, வறுமை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளுவது முற்றிலும் நீங்கும்.
நதிகள் இணைந்தால் நாடு செழிக்கும்! வாருங்கள் ஒன்றுபட்டு செயல்படுவோம்! உலகில் வலிமைபெற்ற பொருளாதார வல்லரசாக இந்தியாவை மாற்றுவோம்!!
இந்திய நதிகள் இணைப்பு இயக்கத்தின்Group-ல் இணையுங்கள்..
https://www.facebook.com/groups/indianrivers/
இந்திய நதிகள் இணைப்பு இயக்கத்தின்Group-ல் இணையுங்கள்..
https://www.facebook.com/groups/indianrivers/
நதிகள் இணைப்பு என்ற கானல் நீர் திட்டங்கள்
நதிகள் இணைப்பு என்ற கானல் நீர் திட்டங்கள் | ||||
| ||||
![]() இவ்வாறு பதிலளிக்க எந்த தைரியமும் தேவையில்லை. மாறாக போதுமான அறிவும், விழிப்புணர்வும் இருந்தால் போதுமானது. ஆண்டாண்டு காலமாக நீரை அடிப்படையாக கொண்டு வரையறுக்கப்படும் திட்டங்கள் இயற்கைக்கு மாறாகவோ அல்லது அரசியில் பிரச்சனையாக நீடித்து இருக்கும் பொருட்டோதீட்டப் படுகிறது.இப்போதெல்லாம் நதி நீர் பிரச்சனை என வரும் போது பிறந்தகுழந்தையும் பதில் கூறும் அளவு காவிரிப் பிரச்சனையை இந்த அரசியில் வாதிகள் வளர்த்திருக்கிறார்கள் என்றால் அவர்களை மனமாற பாராட்டியே ஆக வேண்டும். பத்து வருடங்களுக்குள் அனைத்து நதிகளும் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதி மன்ற கருத்தும், வடி நில பகுதிகளை மாற்றி அமைத்தல் போன்ற பொதுபணித் துறை வேலைகளும், இயற்கை விதிகளுக்கு மாறாகவும், கடுமையான பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்விதமாகவும் அமைகின்றன.மத்திய அரசின் 9வது ஐந்தாண்டு திட்டம் நதி நீர் இணைப்பு பற்றி மூச்சே விடவில்லை. 10வது திட்டமும் வாய் திறக்கவில்லை. பிரதமர் தனது உரையில் தேசிய நீர் கொள்கையை மட்டுமே அறிவித்தார். இது நதிகள் இணைப்பு பற்றி அல்ல! நதிகள் இணைப்பு என்பது பல்வேறு அமைச்சகங்களின் ஒத்துழைப்பை பொறுத்தது. சுற்றுச் சூழல் அமைச்சகம்,பிற அமைச்சகங்களின் விதிமுறைகளை மதித்து தன்னை உருமாற்றி திட்டத்தை செயல் படுத்த வேண்டும். பிற மாநிலங்களின் ஒத்துழைப்பு இங்கு மிக அவசியம். ஒத்துழைப்பு என்பது, அரசியல் சூறாவளியில் காணாமல் போகும் வாய்ப்பே அதிகம் உள்ளது. ![]() அலட்சியத்தாலும் தற்போது தூர்ந்து போனது. ராமசாமி ஐயர் தனது ‘water perspectives,issues concerns‘ புத்தகத்தில் ‘linking of rivers: vision or mirage‘ பாகத்தில் ஆறுகளை இணைப்பதோ அணைகட்டுஅமைப்பதோ இயற்கையை நாம் மிக கேவலமான வார்த்தைகளை கொண்டும்,ஒழுங்கீனமான செயல் பாடுகளாலும் கோபமூட்டுகிறோம் .அதன் முழு கோபத்தை நம்மால் தாங்க முடியாது என்று எச்சரித்தார். அவரின்வார்த்தைகளை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. அவரின் வாக்கு பலித்தது சுனாமி வந்தது. எனினும் நம் அலட்சிய போக்கு விட்ட பாடில்லை. கங்கை-காவிரி இணைப்பில் வட மாநிலங்கள் ஆர்வம் காட்டவில்லை.இன்னும் கூறப் போனால் பீகார் போன்றவை தாங்கள் கங்கையின் ஒரு சொட்டு நீரை கூட அனுபவிக்கவில்லை என குறை கூறுகின்றன. மேற்கு வங்கம் இதே குறையை கூறி இந்திய வங்க தேச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு வலியுறுத்துகிறது. தேசிய நதி நீர் விரிவாக்க ஆணையம் தனது அறிக்கையில்,1982ல் உருவாக்கப்பட்ட குழு வடிநில பகுதிகளை ஆராய்ந்து எங்கு அதிக நீர் நதிகள்மூலம் வருகிறது ,எங்கு குறைந்து வருகிறது என்பதை கண்டறிந்து அவற்றிர் கேற்ப நீர்நிலை தேக்கங்களை உருவாக்கி நீரை தேக்கி வைப்பதே புத்திசாலி தனம் என்று கூறுகிறது. சென்ற மாதம் பேசிய மன்மோகன் சிங்கும் இதே குரலை பிரதிபலித்தார். ![]() சிறு தேக்கங்களை பாறை நிலங்களில் உருவாக்குவது தான் சால சிறந்தது.பாறைகளின் வழியே வடிநீராக வாய்கால் மூலம் ஓடிவரும் நீர் இயற்கையிலேயே கட்டுப் படுத்தப்படுவதுடன் அளவும் குறைக்கப்படுகிறது.மலை தொடர் இருக்கும் எனில், மலையை சுற்றி வாய்க்கால் அமைத்து நீரை கடத்தும் போது மலையும் பாதிக்கப்படாது மலையடிவாரங்களும் வளம் பெறும். இதனால் இங்குவாழும் விலங்குகள் நீர் குடிக்க ஏதுவாகவும் ,ஊருக்குள் நுழைவதும் தடுக்கப்படும். இதையெல்லாம் புறக்கணித்து விட்டுஅரசு, அணைகட்டுதல் மிகப் பெரும் கால் வாய் அமைத்தல், பிரம்மாண்டதேக்கங்களை உருவாக்குதல் என திட்டங்களை தீட்டி அதற்கென ஆணையத்தையும் அமைத்து விட்டது. 10வது ஐந்தாண்டு திட்டத்தில் இதற்கான நிதி ஒதுக்கீடு 70,000 கோடி ரூபாய் எனவும், 11வது ஐந்தாண்டில்1,10,000 கோடி எனவும் செலவு கணக்கு காட்டுகிறது . உச்ச நீதி மன்றமோ எந்த ஒரு அடிப்படை காரணங்களையும் ஆராயாமல் இத்திட்டத்திற்கு 5,60,000கோடி தான் தருவேன்! என தன்னிச்சையாக நிர்ணயிக்கிறது. விந்தைகளுக்கும், சந்தேகங்களுக்கும், கோமாளித்தனங்களுக்குமாக இத்திட்டங்களும், செயல் பாடுகளும் அமைந்து விடுகின்றன.கே,எல். ராவ் என்ற பொறியாளர் கங்கை-காவிரி இணைப்பு சாத்தியப்படும். அதன் மூலம் இந்தியாவை வளம் கொழிக்கும் நாடாக மாற்ற முடியும் என்றார். ஆனால் சர்.ஆர்தர் கார்டன் "இது சாத்தியமற்றது, விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் "என்று ஆங்கிலேய அரசுக்கு, முன்பே அறிக்கையைசமர்பித்திருக்கிறார்.அதற்கான காரணங்களையும் தெளிவுபட கூறியுள்ளார். "விந்திய மலை தடுப்பரன் மீது 50,000 கன அடி நீரை, 1400 அடி உயரத்திற்கு மின்சார மோட்டார் மூலம் ஏற்றுவதென்பது சாத்தியமற்றது .அவ்வாறே செய்தாலும் 300 அடி உயரம், 750 மீ நீளமும் மலையை வெட்டி எடுக்க வேண்டும். இப்படி செய்வது சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தாதா?" என வினா எழுப்பினார். அசாமில் 200 கி,மீ.,மேற்கு வங்கத்தில் 50 கி.மீ, மத்திய பிரதேசத்தில் 1000 கி.மீ, மஹாராஷ்டிரத்தில் 500 கி.மீ, தமிழ் நாட்டில் 550 கி.மீ,என மொத்தம் 3750 கி.மீ கால் வாய் வெட்டி நீரை கடத்த வேண்டும். இது சாத்தியம் தானா? சமீபத்தில் தமிழக அரசு வெறும் 76 கி.மீ கால்வாய் வெட்டி அதன்மூலம் கருமேனி ஆறு, நம்பிஆறு, தாமிரபரணி போன்றவற்றை இணைக்கும் திட்டம்2012 ல் முடிவடையும் ,அதற்கான செலவு 368 கோடி என நமது துணை முதல்வர் திரு. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கே இப்படி என்றால் மேற்குறிப்பிட்ட தொலைவை அடைய எவ்வளவு காலமாகும், செலவு என்னவாகும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இயற்கை விரும்புவதே நம்மை வாழ வைப்பதுதான். அறிவியலின் துணையோடும்ஆசை கவிந்த நெஞ்சோடும் இயற்கையை சீண்டிப் பார்ப்பது அழகல்ல.அழிந்து போவோம். |
நதிகள் இணையட்டும்.. நாடு செழிக்கட்டும்
நதிகள் இணையட்டும்.. நாடு செழிக்கட்டும்..
வருடத்திற்கு குடிதண்ணீர் தேவை மட்டும் - 51.40 டி.எம்.சி.
நீர்பாசனத்திற்கு தேவையான தண்ணீர் - 1766 டி.எம்.சி.
தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீர் - 54.90 டி.எம்.சி.
மின்சார உற்பத்திக்கு தேவையான தண்ணீர் - 4.20 டி.எம்.சி.
விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் - 15.30 டி.எம்.சி.
நீர்பாசனத்திற்கு தேவையான தண்ணீர் - 1766 டி.எம்.சி.
தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீர் - 54.90 டி.எம்.சி.
மின்சார உற்பத்திக்கு தேவையான தண்ணீர் - 4.20 டி.எம்.சி.
விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் - 15.30 டி.எம்.சி.
தேசிய நீர்வழிசாலை திட்டமும் நதிகள் இணைப்பும்
தேவை தேசிய நீர்வழிச்சாலை திட்டம் வளமான நாடாக மாற்ற ஒரு வாய்ப்புஇத்திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்துமா? என சந்தேகம் தெரிவிக்கிறார்கள். அதே நேரத்தில் தங்க நாற்கர நான்குவழிசாலையும் உலகத்தரம வாய்ந்த விமான தளங்கள் நாடெங்கும் வந்ததையும் நாம் புரிந்த கொள்ள வேண்டும். இந்த திட்டத்திற்கு பணத்திற்கு என்ன செய்வது என கேள்வி எழுப்புகின்றனர் . இத்திட்டம் தனியாருடன் இணைந்து தேசிய நெடுஞ்சாலை போல செயல்படுத்த முடியும் என்பதால் அரசாங்கத்திற்கு நிதிச்சுமை இருக்காது. பலர் இத்திட்டத்தை பாராட்டி நாங்கள் என்ன செய்ய என கேட்கிறார்கள். ஒரு சிலர் உதவியுடன் தமிழ்நாடு நீர்வழிச்சாலை திட்டத்தினை ஆரம்ப ஆய்வு செய்ய நாங்கள் ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறோம்.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் கேப்டன் தஸ்துார் என்பவர் நதிநீர் இணைப்பு பற்றி ஒரு திட்டத்தை அரசுக்கு சிபாரிசு செய்தார். தேசிய நீர்வள ஏஜன்சி எனப்பட்ட இத்திட்டத்தில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. சில பகுதிகளில் மலையை குடையவும், வேறு சில பகுதிகளில் தண்ணீரை பம்ப் செய்யவும் வேண்டியிருந்தது. மாற்று திட்டங்களை ஏற்பாடு செய்யலாம் என மத்திய அரசு கைவிரித்தது. இந்நிலையில் மத்திய அரசின் நதிநீர் இணைப்பு உயர்மட்ட குழு உறுப்பினர் ஏ.சி.காமராஜ் கங்கா குமரி தேசிய நீர்வழிச்சாலை திட்டத்தை தயாரித்து கொடுத்தார். இவர் நவாட்(தேசிய நீர்வழி மேம்பாட்டு தொழில் நுட்பம்)தலைவரா கவும் உள்ளார்.
தேவை தேசிய நீர்வழிச்சாலை:கங்கா-குமரி தேசிய நீர்வழிச்சாலை திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை போல நீர்வழிச்சாலைகள் அமையும். இத்திட்டமானது, இந்திய நதிகளின் வலைப்பின்னல்கள் போல இமயமலை நீர்வழிச்சாலைகள், மத்திய நீர்வழிச்சாலைகள், தெற்கு நீர்வழிச்சாலைகள் என வரைவு செய்யப்பட்டுள்ளது. இமயமலை நீர்வழிச்சாலைகள் மேற்கிலிருந்து கிழக்காக நாடு முழுவதையும் இணைத்து ஓடும். மத்திய நீர்வழிச்சாலைகள் மற்றும் தெற்கு நீர்வழிச்சாலைகள் மத்திய மாநிலங்களையும் மற்றும் தெற்கு மாநிலங்களையும் கன்னியாகுமரி வரைக்கும் இணைக்கும்.
வீணாகும் தண்ணீர் பயனாகும்:இத்திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் முழுமையான தண்ணீரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடலினுள் வீணாகும் தண்ணீரிலிருந்து எடுக்கப்படும். இமயமலை நீர்வழிச்சாலைகள் கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் உயரத்திலும், மத்திய மற்றும் தெற்கு நீர்வழிச்சாலைகள் கடல் மட்டத்திலிருந்து 250 மீட்டர் உயரத்திலும் செல்லும். இந்த நீர் வழிச்சாலைகள் மிக குறைந்த அளவாக 10 மீட்டர் ஆழமுடைய தண்ணீரை உடையனவாக இருக்கும். இத்திட்டத்தின் கடல் மட்டத்திலிருந்து எழும் உயர அளவு வேறுபாடுகளினால் மிக மிகுதியான புனல் மின்சாரம் தயாரிக்க முடியும்.
தண்ணீர் பஞ்சம் ஏற்படாது:இந்த நீர்வழிச்சாலைகளில் ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்கு நீரை மாற்றி அனுப்பலாம். கங்கை நதி நீரை காவிரி வரை அனுப்பலாம். பிரம்மபுத்திராநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பொழுது கங்கை நதிப்பகுதியில் நீர் குறைவாக இருப்பின் பிரம்மபுத்திரா பகுதியிலிருந்து கங்கை பகுதிக்கு நீரை அனுப்பலாம். இத்திட்டம் மூலம் நாட்டில் எந்த இடத்திலும் குடிநீருக்கோ, விவசாயத்திற்கோ தண்ணீர் பஞ்சம் ஏற்படாது. நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
போக்குவரத்திற்கும் வாய்ப்பு:இந்த நீர்வழிச்சாலைகள் திட்டம், மிக குறைந்த செலவில் போக்குவரத்து திட்டமாக இருக்கும். 15,000 கி.மீ., நீளமுள்ள நீர் தேக்கமாக இருந்து மிக அதிகமான நிலம் சாகுபடிக்கு உரியதாக இருக்கும். பிரம்மபுத்திரா அல்லது கங்கை அல்லது கிருஷ்ணா அல்லது காவிரி நதிகளின் வெள்ளப் பெருக்கினால் கிடைக்கும் தண்ணீர் தேக்கப்பட்டு, சேமிக்கப்படுவதால் நான்கு மாதங்களுக்கு விவசாயத்திற்கும், ஆண்டு முழுவதும் குடிநீருக்கும் பயன்படும். வறட்சியின் பிடியிலுள்ள மாநிலங்களுக்கு ஒன்பது மாதங்களுக்கு விவசாயத்திற்கும், புனல் மின்சாரம் தயாரிப்பதற்கும் மற்றும் ஆண்டு முழுவதும் குடிநீருக்கும் பயன்படும்.
போக்குவரத்திற்கும் வாய்ப்பு:இந்த நீர்வழிச்சாலைகள் திட்டம், மிக குறைந்த செலவில் போக்குவரத்து திட்டமாக இருக்கும். 15,000 கி.மீ., நீளமுள்ள நீர் தேக்கமாக இருந்து மிக அதிகமான நிலம் சாகுபடிக்கு உரியதாக இருக்கும். பிரம்மபுத்திரா அல்லது கங்கை அல்லது கிருஷ்ணா அல்லது காவிரி நதிகளின் வெள்ளப் பெருக்கினால் கிடைக்கும் தண்ணீர் தேக்கப்பட்டு, சேமிக்கப்படுவதால் நான்கு மாதங்களுக்கு விவசாயத்திற்கும், ஆண்டு முழுவதும் குடிநீருக்கும் பயன்படும். வறட்சியின் பிடியிலுள்ள மாநிலங்களுக்கு ஒன்பது மாதங்களுக்கு விவசாயத்திற்கும், புனல் மின்சாரம் தயாரிப்பதற்கும் மற்றும் ஆண்டு முழுவதும் குடிநீருக்கும் பயன்படும்.
திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:600 மில்லியன் மக்களுக்கு தடையின்றி குடிநீர் ஆண்டு முழுவதும் கிடைக்கும். 150 மில்லியன் ஏக்கர் கூடுதல் பாசன வசதி பெறும். நாட்டின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். தேசிய நீர்வழிச்சாலைகளின் இயக்கத்தால், 60 ஆயிரம் மெகாவாட் புனல் மின்சாரம் மாசற்றதாக உற்பத்தி செய்யப்படும். 250 மில்லியனுக்கும் மேலான வேலைவாய்ப்புகள் உருவாகும். 15 ஆயிரம் கி.மீ., நீளமுள்ள அழகான தேசிய நீர்வழிச்சாலைகளில் கப்பல், படகு போக்குவரத்து குறைந்த செலவில் நடக்கும். ஆண்டுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ஆயில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு மற்றும் புதிய காடுகள் உருவாக்கம் மூலம் உலக வெப்பமயமாதல் குறையும். சுற்றுப்புறச்சூழல் மேம்பாடு அடையும். திட்டத்தில் எந்த இடத்திலும் நீரேற்ற பணி இல்லாததால், இயக்க செலவு மிக குறையும். விவசாயிகள் தேவையான அளவுதண்ணீரை பெற முடியும்.
மத்திய அரசு செயல்படுத்தலாம்:வெள்ளப்பெருக்கு கட்டுப்படுத்தப்படுவதால், ஆண்டு தோறும் 40 ஆயிரம் கோடி மதிப்புள்ள வெள்ளச்சேதங்கள் தடுக்கப்படும். விவசாயிகள் தேவையான அளவிற்கு, நீரினை பெற்று விவசாயம் நடக்கும். தேசிய நீர்வழிச்சாலையை நெடுஞ்சாலை போல, சட்ட விதிமுறை 246 ஏழாவது ஷெட்யூல் 1/24 யூனியன் லிஸ்டில் கூறியுள்ளபடி மத்திய அரசே செயல்படுத்த முடியும். மின் இணைப்பு மூலம் தற்போது மாநிலங்களுக்கு இடையில் மின்சாரம் பகிர்ந்து கொள்வது போல,தண்ணீரையும் பகிர்ந்து கொள்ள முடியும்.
தமிழக நீர்வழிச்சாலை திட்டம்:இத்திட்டத்தில் 900 கி.மீ., துாரத்திற்கு நீர்வழிப் பாதை, நீர் தேக்கம் அமையும். ஐந்து கோடி பேருக்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும். 75 லட்சம் ஏக்கர் கூடுதல் பாசன வசதி பெறும். 1,800 மெகாவாட் மாசற்ற நீர் மின்உற்பத்தி செய்யப்படும். நிலத்தடி நீர் மட்டம் உயருவதால், ஆண்டுக்கு 1350 மெகாவாட் மின்சாரம் மீதமாகும். 150 லட்சம் மக்களுக்கு வேலை கிடைக்கும். வெள்ளத்தை தடுத்து, தேக்கி பின் தேவையான இடங்களுக்கு அனுப்ப முடியும். புதிய காடுகளை உருவாக்க முடியும். நீர்வழிச்சாலையினால் சுற்றுலா வளரும்..
ஆர்வம் காட்டிய அப்துல் கலாம்:இத்திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நிறைவேற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. . இந்தியர்களின் கனவுத்திட்டமான இதை நிறைவேற்றுவதன் மூலம், ''வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால், மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்,'' என்ற பாரதியின் கனவை நனவாக்க முடியும்
நதிகள் இணைப்பு திட்டம் சாத்தியமானது தான் நிபுணர் கருத்து
நதிகள் இணைப்பு திட்டம் சாத்தியமானதுதான் என்று தேசிய நீர் தொகுப்பு திட்ட ஆலோசகர் டாக்டர் எஸ்.கல்யாணராமன் கூறி உள்ளார்.
நதிகள் இணைப்பு திட்டம்
இந்தியாவில் ஒரு பகுதியில் வறட்சியும், மற்றொரு பகுதியில் வெள்ளப்பெருக்கும் ஏற்படு வதை தடுப்பதற்காக, முக்கிய நதிகளை இணைப்பது என்று மத்திய அரசு தீர்மானித்து உள்ளது. இதுகுறித்து ஆராய முன்னாள் மத்திய மந்திரி சுரேஷ் பிரபு தலைமையில் பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.
கங்கை, காவிரி உள்ளிட்ட முக்கிய நதிகளை இணைத்தால் நாடு செழிக்கும் என்பதால் இந்த திட்டத்துக்கு பல்வேறு தரப் பினரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் சில பிரச்சி னைகளும் உள்ளன.
நிபுணர் கருத்து
என்றாலும் நதி நீர் இணைப்பு திட்டம் சாத்தியமானதுதான் என்றும், இந்த திட்டத்தை நிறைவேற்றினால் நாட்டுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்றும் தேசிய நீர் தொகுப்பு திட்ட ஆலோசகர் டாக்டர் எஸ்.கல்யாணராமன் கருத்து தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:-
வீணாகும் நீர்
நம் நாட்டில் போதிய நீர்வள ஆதாரங்கள் உள்ளன. என்றா லும் சரியான நீர் பங்கீடு நிர்வாகம் இல்லாததால்தான் பிரச்சினை ஏற்படுகிறது.
80 சதவீதத்துக்கும் அதிகமான மழை நீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. இதை நாம் முறைப்படி சேமித்து பயன்படுத் தினால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. மழை நீர் கடலுக்கு சென்று வீணாவதை தடுக்க நீர்த்தேக்கங்களை அமைப்ப தோடு நதிகளையும் இணைக்க வேண்டும்.
சாத்தியமானதுதான்
உலக மக்களின் தண்ணீர் தேவையின் பாதி அளவை தீர்க்கக்கூடிய அளவுக்கு இமய மலையில் பனிக்கட்டி பாளங்கள் உள்ளன. 10 ஆயிரம் ஆண்டு களுக்கும் மேலாக உள்ள பனிப் பாறைகளின் மூலம் உலகின் 65 முதல் 70 சதவீத தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். இன்னும் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு இமயமலையில் பனிப் பாறைகளும், பனி முகடுகளும் பரந்து விரிந்து கிடக்கின்றன.
கடலுக்கு சென்று வீணாகும் தண்ணீரில் 10 சதவீதத்தை சேமித் தாலே இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்த்து விட முடியும். இதற்கு ஒரே வழி நதிகளை இணைப்பதுதான். இது சாத்தியமான திட்டம்தான்.
ரூ.5 லட்சம் கோடி செலவு
இந்த திட்டத்தின்கீழ் மொத்தம் 54 நீரிணைப்புகள் ஏற்படுத்தப் பட வேண்டும். இவற்றில் 20 நீரிணைப்புகள் இமயமலையில் உற்பத்தியாகும் நதிகள் தொடர்பு உடையதாகவும், மற்றவை தென்னிந்திய தீபகற்ப நதிகள் தொடர்பு உடையதாகவும் இருக் கும். 54 நீரிணைப்புகளுக்கும் தனித்தனி கழகங்களை ஏற் படுத்தி இவற்றின் மூலம் திட் டத்தை விரைவாக நிறைவேற்றி முடிக்க முடியும்.
மொத்த திட்டத்தையும் நிறை வேற்றி முடிக்க 10 ஆண்டுகள் ஆகும். ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் கோடி செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டு உள்ளது.
பாராளுமன்றத்தில் சட்டம்
இந்த திட்டத்தை அரசாங்கமே நேரடியாக நிறைவேற்றக் கூடாது. கொங்கன் ரெயில் திட்டத்தை நிறைவேற்றியது போன்று நிறை வேற்ற வேண்டும். பங்கு பத்திரங்கள் மூலம் இந்த திட்டத் துக்கு தேவையான பணத்தை மக்களிடம் இருந்து திரட்ட வேண்டும்.
நதிகள் இணைப்பு திட்டத் தால் பாதிக்கப்படும் மக்களை வேறு இடங்களில் குடியமர்த்த உரிய நடவடிக்கைகளை உடனடி யாக மேற்கொள்ள வேண்டும்.
நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த பாராளுமன்றத் தில் சட்டம் கொண்டு வர வேண் டும். அப்போதுதான் தடைகள் இன்றி இந்த திட்டத்தை நிறை வேற்ற முடியும்.
உற்பத்தி பெருகும்
நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றினால் நாட்டில் கூடுதல் நிலப்பகுதியில் விவ சாயம் செய்ய முடியும். இதனால் வேளாண்மை பொருட்களின் உற்பத்தி இரு மடங்காக உயரும். கூடுதலாக ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு உள்நாட்டு மொத்த உற்பத்தி 12 சதவீதமாக உயரும். இவ்வாறு எஸ்.கல்யாண ராமன் கூறி உள்ளார்.
தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம்
தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் (Indian Rivers Inter-link) என்பது இந்தியாவிற்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் ஓர் அரசுத் திட்டம் ஆகும். இதன் மூலம் வெள்ளக் காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் உபரி நீரை நாட்டின் மற்ற வறண்ட பகுதிகளுக்குத் திருப்பிவிடும் உன்னதத் திட்டமாகும்.
பொருளடக்கம்
வரலாறு
இந்திய அரசின் தேசிய நீர்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நீர்வள மேம்பாட்டு ஆணையம் (அ) தேசிய நீர் மேம்பாட்டு முகவாண்மை (National Water Development Agency) இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ந்து வருகிறது.
கடந்த 1972 ஆம் ஆண்டு மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்த டாக்டர். கே.எல்.ராவ் அவர்களின் சீறிய ஆய்வின் பேரில் முதன் முதலாக கங்கை - காவிரி இணைப்புத் திட்டம் முன் வைக்கப்பட்டது.
கங்கை - காவிரி இணைப்புத் திட்டம்
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இரண்டு பகுதிகளாக்ப் பிரிக்கப்பட்டுள்ளன[1].
- இமாலய ஆறுகள் திட்டம்
இமயமலையிலிருந்து பாயும் ஆறுகளான கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆகியவற்றை இணைப்பது, கிழக்கு நோக்கிப் பாயும் கங்கை நதியை மகாநதி ஆறுடன் இணைப்பது.
- தீபகற்ப ஆறுகள் திட்டம்
இந்திய தீபகற்பத்தின் வடக்கிலுள்ள மகாநதி மற்றும் கோதாவரி ஆறுகளை தெற்கிலுள்ள கிருஷ்ணா மற்றும் காவேரிஆறுகளுடன் இணைப்பது.
மேற்கு நோக்கி பாயும் ஆறுகளை இணைத்து அரபிக் கடலில் கலக்கும் உபரி நீரை கிழக்குப் பகுதியில் உள்ள வறண்ட பகுதிகளுக்குத் திருப்பி விடுவது.
பயன்கள்
விவசாயத்தை நம்பி உள்ள இந்திய நாட்டில் நீர்ப்பாசனத்திற்கு பெரும்பான்மையான விவசாயிகள் பருவ மழையையே நம்பியுள்ளனர். பருவமழை பொய்த்துப் போகும் காலங்களில் வறட்சி ஏற்பட்டு உணவு உற்பத்திப் பாதிக்கப்படுகிறது. அதே காலத்தில் மற்ற பகுதிகளில் அதிக அளவு மழை பொழிந்து ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு உபரி நீர் வீணாக கடலில் சென்று கலக்கின்றது.
இப்படி வீணாகும் நீரை வறண்ட பகுதிகளுக்குத் திருப்பிவிடுவதன் மூலம் பொதுமக்களுக்குக் குடிநீர் வசதியும், விவசாயத்திற்கான பாசன வசதியும் பெறமுடியும்.
திட்ட முன்னேற்றம்
தேசிய அளவிலான நதிநீர் இணைப்புத் திட்டத்தில் இன்னும் எந்தவிதக் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் எற்படவில்லை.
ஆனால் மாநில அளவில் நதிகளை இணைப்பதற்கான முயற்சிகள் அந்தந்த மாநில அரசுகளினால் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.
குஜராத் அரசு தனது மாநிலத்தில் பாயும் ஆறுகளை இணைக்கும் முயற்சியை ஆரம்பித்து அதில் வெற்றியும் பெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசு தனது மாநிலத்தில் பாயும் ஆறுகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்துவிட்டது.
தடைக்கற்கள்
தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள கால தாமதத்திற்காகச் சொல்லப்படும் காரணங்கள்:
- இதற்குத் தேவையான மிகப் பெரிய செலவுத் தொகை
- இமாலய நதிகளை இணைப்பதை ஆட்சேபிக்கும் அந்நதிகளினால் பயன்பெறும் அண்டை நாடுகள்
- சுற்றுச் சூழல் மற்றும் மக்களுக்கான பாதிப்பு
- மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு
தமிழக நதிநீர் இணைப்புத் திட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழக நதிநீர் இணைப்புத் திட்டம் என்பது இந்திய மாநிலமான தமிழகத்தில், மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை கால்வாய்கள் மூலம் இணைத்து, மழைக் காலங்களில் வீணாக கடலில் கலக்கும் உபரி வெள்ளநீரை வறட்சிப் பகுதிகளுக்கு வழங்கும் திட்டம் ஆகும்.
பொருளடக்கம்
தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம்
மழைக் காலங்களில் அணைகளில் போதிய நீரை சேமித்து வைத்தாலும், தாமிரபரணி மற்றும் அதன் துணை ஆறுகளிலிருந்து 13.8 டி.எம்.சி (அ) 13,800 மில்லியன் கனஅடி நீர் வீணாக கடலில் கலக்கிறது.
திருநெல்வேலியிலிருந்து தாமிரபரணியின் உபரி நீரை ராதாபுரம், நாங்குநேரி போன்ற வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல ரூ.369 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன
இத்திட்டத்திற்கு வெள்ளநீர் கால்வாய் திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
வெள்ளநீர் கால்வாய் திட்டம்
தமிழகத்தின் முதல் நதிநீர் இணைப்புத் திட்டமாகக் கருதப்படும் இத் திட்டத்தின்படி, தாமிரபரணி ஆறு, கருமேனி ஆறு,நம்பியாறு, பச்சையாறு, கோரையாறு, எலுமிச்சையாறு ஆகிய 6 நதிகள் இணைக்கப்படுகின்றன.
இதன் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 23040 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுவதுடன் 50 கிராமங்கள் பயன்பெறும்.
இதன் முதல் கட்டப் பணிகள் 21 பிப்ரவரி 2009 அன்று தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்படி, கன்னடியன் கால்வாயை அகலப்படுத்தி, திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே கன்னடியன் கால்வாயின் 3-வது அணைக்கட்டிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் எம்.எல். தேரி வரை 73 கி.மீ. தொலைவுக்கு வெள்ளநீர் கால்வாய் வெட்டப்படுகிறது. இதனால் சாத்தான்குளம் வட்டம், சுப்புராயபுரத்தில் 2 டி.எம்.சி (அ) 2 மில்லியன் கனஅடி நீரை சேமித்து வைக்கும் வகையில் 2 அணைக்கட்டுகள் கட்டப்படுகின்றன.
இத்திட்டப் பணிகள் 2012ஆம் ஆண்டு முடியும்.
தடைக்கற்கள்
எதிர்காலத்தில் வெள்ளக் காலங்களில் மட்டுமல்லாமல், எல்லா காலங்களிலும் நீரை பங்கிட வேண்டிய சூழ்நிலை வரலாம் என்ற அச்சத்தின் காரணமாக கன்னடியன்கால்வாய் விவசாயிகள் சங்கத்தினர் இத்திட்டதிற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
காவிரி - குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டம்
இத்திட்டத்தின்படி, காவிரி, அக்னியாறு, தென்வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை, குண்டாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் 4 டி.எம்.சி (அ) 4 மில்லியன் கனஅடி நீரை சேமித்து வைக்கலாம். இதன் திட்ட மதிப்பு ரூ. 2,180 கோடி ஆகும். இத்திட்டம் பல கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது.
முதல் கட்டமாக காவிரி-கட்டளைக்கால்வாய் ஆகியவற்றை இணைக்க ரூ.189 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முதல் கட்டப் பணிகள்
காவிரியின் குறுக்கே கட்டளையில் கதவணை கட்டும் திட்டத்தினை நிறைவேற்றிட 24 ஜூன் 2008 அன்று பணிகள் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டம் மாயனூரையும், நாமக்கல் மாவட்டம் சீலைப்பிள்ளையார் புதூரையும் இணைக்கும் வகையில், மாயனூர் காவிரியாற்றில் படுகையணையை கதவணையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதன் முதல் 1.4 டி.எம்.சி (அ) 1.4 மில்லியன் கனஅடி நீரை சேமித்து வைக்கலாம்.
இத்திட்டப் பணிகள் 2011ஆம் ஆண்டு முடியும்.
தென்பெண்ணை - செய்யாறு இணைப்புத் திட்டம்
இத்திட்டதிற்கான தயாரிப்பு வேலைகள் நடைபெற்றுவருகின்றன.
பூமியைக் காப்பாற்றுவோம்!
பூமியைக் காப்பாற்றுவோம்!
- விவரங்கள்
- எழுத்தாளர்: கொளஞ்சி
- தாய்ப் பிரிவு: அறிவியல் ஆயிரம்
- பிரிவு: சுற்றுச்சூழல்
நம்மைச் சுற்றியிருக்கும் இயற்கை வளம் நிரம்பிய மரங்கள், காய்கள் பயிர்கள், வயல்வெளிகள், பூக்களென்று நம்முடைய சுற்றுப்புறம், நம்முடைய கண்களை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டு வருகிறது. கிராமத்திலுள்ள சின்னச்சின்ன ஊர்கள், ஊருக்குள்ளே வாழும் மனிதர்கள், மனிதர்களோடு தோழமை கொண்டு துள்ளித்திரிந்த ஆடு மாடுகள், நாய்கள், பூனைகள், வீட்டுக்குள்ளே கூடுகட்டி வாழ்ந்த சிட்டுக்குருவிகள், மழைக்காலத்தில் உள்ளுக்குள்ளே தலைநீட்டிப் பார்க்கும் தவளை போன்ற எண்ணற்ற உயிரினங்கள் அனைத்துக்கும் சோறு போட்டு மகிழ்வித்த சுற்றுப்புறத்துடைய இயற்கை வளம், காலப்போக்கில் அதன்மீது அக்கறை காட்டாமையாலும், பராமரிப்பு எடுத்துக் கொள்ளாமையாலும், கவனிப்பாரற்று சீரழிந்து கொண்டு வருகிறது. வருங்காலத்தில் இந்தப் சீரழிவு ஒரு பிரம்மராட்சசனைப் போல விசுவரூபமெடுத்துக் கொண்டு வருகிறது.
முன்னேற்றம் அதனுடனே பயணிக்கிற நாகரீகம் ஆகியவைகளுடைய ஆதிக்கத்தால் காடுகள் அழிந்து கொண்டு வந்தது. காடுகளிலுள்ள மரங்கள், மலைகளிலுள்ள மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டதாலும், சுற்றுப்புறத்தின் பசுமை அழிந்ததாலும், பெய்யும் மழை குறைந்ததாலும், அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. செழிப்பான மழை காடுகளுக்குள்ளேயிருக்கும் உலர்சருகுகள், மக்குகளென்று இயற்கையான உரங்களை சுமந்து கொண்டு ஆறுகளின் படுகைகளில் படியச்செய்து அவைகளுக்கு ஊட்டச்சத்தை கொடுத்து வந்தது. ஆறுகளை சுற்றியிருக்கிற வயல்வெளிகள் படுகைகளிலுள்ள ஊட்டச்சத்தை உறிஞ்சிக் கொண்டதோடு, வயல்வரப்புகளுடைய செழுமை நிறைந்த மண், எண்ணற்ற உயிரினங்களுக்கு உணவுக் களஞ்சியமாக இருந்து வந்தது. முன்னேற்றம் என்கிற பெயரில் வனமரங்கள் வெட்டப்படுவதாலும், முட்செடிகள் அறுக்கப்படுவதாலும், மூலிகைச்செடிகள் வேரோடு பிடுங்கப்படுவதாலும், வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாலும், காட்டுநிலங்கள் அபகரிக்கப்படுவதாலும் இயற்கை தன் அழகை மட்டுமல்ல தன் உடைமையையும் சிறிது சிறிதாக இழந்து கொண்டிருக்கிறது. இந்த சட்டவிரோதமான செயல்களால் காடுகளுடைய பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. இயற்கையின் அருமையை புரிந்து கொள்ளாமல் இந்தப் பேரழிப்பினால் மனிதன் ஈடுகட்ட முடியாத செல்வங்களை இழந்து கொண்டு வருகிறான்.
1980ஆம் ஆண்டு காடுகளுடைய பராமரிப்பு, பாதுகாப்புச் சட்டத்தை இந்திய அரசாங்கம் நடைமுறைக்குக் கொண்டு வந்தது. காடுகளின் பரப்பளவு குன்றாமலிருப்பதற்கும், அதனுடைய வளம் சீரழிக்கப்படாமலிருப்பதற்கும், அரசாங்கம் அதற்குரிய திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்து திறமையாக செயல்படுத்தியிருக்கிறது.
1. காடுகளில் செயல்படும் சட்டவிரோதமான செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும். அவ்வாறு சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
2. காடுகளிலுள்ள மரங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். காடுகளுடைய செழிப்புத்தன்மை சீரழிந்து போகாமலிருக்க ஆங்காங்கே காணப்படுகிற காலியான நிலங்களில் புதிய மரங்களை வளர்க்க வேண்டும்.
3. காடுகளுடைய பரப்பளவு குறையாமலிருக்க, அழிந்து போன மரங்களை அப்புறப்படுத்தி அந்த இடங்களில் இன்னொரு மரங்களை வளர்க்க வேண்டும். அவைகளுக்கு பாதுகாப்பு கொடுத்துக் காடுகளை அடர்த்தியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
4. காடுகளில் தீ பற்றிக் கொள்வது இயற்கை, இந்த தீவிபத்து நிகழ்வைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.
5. பன்முகத்தன்மையைக் கொண்ட உயிரினங்கள் அழிந்து போகாமலிருக்க, காடுகளுடைய செழிப்புத் தன்மை பாழாகாமலிருப்பதற்கும், அதனைப் பேணிக்காப்பதற்குமுரிய தகுந்த நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஆகிய செயல் திட்டங்களை இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது. இந்திய அரசு அனைத்து செயல் திட்டங்களையும் திறமையாகச் செயல்படுத்தியதோடு, விளம்பரங்கள், போஸ்டர்கள் மூலம் சுற்றுப்புறச் சூழலுக்கான விழிப்புணர்வின் அருமையை மக்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறது. மேலும் மக்களுக்கு, இயற்கை வளத்தை மேம்படுத்துவதற்கான செயல் திட்டங்களை நடைமுறையில் திறைமையோடு செயல்படுத்துவதற்குரிய பயிற்சிக் கூடங்களையும் அமைத்துக் கொடுத்திருக்கிறது.
- ஆகிய செயல் திட்டங்களை இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது. இந்திய அரசு அனைத்து செயல் திட்டங்களையும் திறமையாகச் செயல்படுத்தியதோடு, விளம்பரங்கள், போஸ்டர்கள் மூலம் சுற்றுப்புறச் சூழலுக்கான விழிப்புணர்வின் அருமையை மக்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறது. மேலும் மக்களுக்கு, இயற்கை வளத்தை மேம்படுத்துவதற்கான செயல் திட்டங்களை நடைமுறையில் திறைமையோடு செயல்படுத்துவதற்குரிய பயிற்சிக் கூடங்களையும் அமைத்துக் கொடுத்திருக்கிறது.
1972ஆம் ஆண்டு வனவிலங்குகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென்ற சட்டத்தை இந்திய அரசாங்கம் அமல்படுத்தி, அதனை நடைமுறைக்குக் கொண்டு வந்த பெருமையையும் பெற்றிருக்கிறது.
1. வனவிலங்குகளை வேட்டையாடும் சட்டவிரோதமான செயலுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டுமென்றும், அவ்வாறு சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடுபவருக்கு கடுமையான தண்டனை உடனடியாக விதிக்கபட வேண்டும். அவைகளுடைய சுதந்திரம் பறிபோகாமலிருக்க தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
2. நோய் நொடிகள் பீடிக்கப்படாமலிருப்பதற்கு வனவிலங்குகளுக்கு தக்க பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அவ்வாறு நோய் பீடிக்கப்பட்ட வனவிலங்குகளுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும்.
3. அழிவின் விளிம்பிலிருக்கும் வனவிலங்கினங்களுக்கு அதிகமான அக்கறையும், கவனமும் கொடுத்து பாதுகாக்கப்பட வேண்டும்.
4. நோயினால் பாதிக்கப்பட்ட வனவிலங்குகளை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுவதற்கு வேண்டிய ஊர்திகளை வனத்துறையினருக்கு வழங்கப்பட வேண்டும்
ஆகிய செயல்திட்டங்களை இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது. மேலும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவதால் அவைகளுடைய எண்ணிக்கையை பெருக்க வேண்டுமென்பதற்காக இந்திய அரசாங்கம் பல அருமையான செயல்திட்டங்களை வடிவமைத்ததோடு அவைகளை நடைமுறையிலும் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டு வருகிறது. புதுமை, நவீனத்துவம், முன்னேற்றம், மாற்றம், வல்லரசாகுதல், உலகமயமாக்குதல் ஆகிய முயற்சிகள் புவியின் இயற்கைவளத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக நசித்துக் கொண்டு வருகிறது. இத்தகைய முயற்சிகள் இயற்கைக்கு எத்தகைய பாதிப்பைக் கொடுத்திருக்கும் என்பதை அதனுடைய சீற்றத்தின் மூலம் நாம் உணர்ந்து கொள்ளலாம். இந்த முயற்சிகளை விட்டுக் கொடுக்காமல் கைப்பற்றிக் கொண்டிருந்தால், மனிதன் எண்ணற்ற உயிரிழப்புகளைச் சந்திக்க நேரிடும்.
தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களிலிருந்து வெளியேறுகிற கரியமில வாயு பூமியின் மேல்மட்டத்தில் பரவிக் கொண்டு வருவதாலும், புவியினுடைய வெப்பத்தை அதிகரித்து, மேல்மட்டத்திலுள்ள காற்று மாசுபடுத்தப்பட்டிருக்கிறது. தொழிற்சாலைக் கழிவுகள் நிலத்துடைய செழிப்புத்தன்மையை சீரழிந்திருக்கிறது, மேலும் கடலோரப்பகுதிகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெருகிவரும் மக்கள் தொகையால் உருவாகியுள்ள சத்தங்கள் புவியை அதிர வைத்திருக்கிறது. இனி வருங்காலத்தில் நதிகளும் மற்றும் ஆறுகளும் வற்றிப் போவதற்கு அதிகமான வாய்ப்புள்ளதால் உணவுப் பொருட்கள் கிடைக்காமல், குடிநீர் கிடைக்காமல், பட்டினி, பஞ்சம் போன்ற கொடிய நோய்கள் பீடிக்கப்பட்டு அதிகமான பேரிழப்புகளைச் சந்திக்க நேரிடலாம். தொழிற்சாலைகளுடைய முன்னேற்றம் நதிகளை மாசுபடுத்தியிருக்கிறது. காற்றை மாசுபடுத்தியிருக்கிறது, நம்மை சுற்றியுள்ள சுற்றுப்புறத்தை மாசுபடுத்தியிருக்கிறது. சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க வேண்டுமென்பதற்காக அரசு பல வழிகளை திட்டமிட்டு செயல்படுத்தியிருக்கிறது. அவை;
1. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறுகிற கழிவுப் பொருட்களால் விளையக்கூடிய அபாயத்தின் தீவிரத்தை ஆராய்வதற்கு பல ஆய்வுக்கூடங்களை அமைத்துக் கொடுத்திருக்கிறது.
2. தொழிற்சாலைகளுடைய கழிவுகள் அதிகபட்சமான அபாயத்தை விளைவிக்கக் கூடியதாகயிருந்தால் அவைகளுடைய செயல்பாடு வேகத்தை குறைப்பதற்கான வழிகளை வகுத்துக் கொடுத்திருக்கிறது.
3. மாசுபடிந்த நதிகளை சுத்தமாக்குவதற்கும், மாசுபடிந்த காற்றைச் சுத்தமாக்குவதற்கும் தகுந்த வழிமுறைகளை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறது.
4. புவியிலுள்ள சத்தங்களை குறைப்பதற்கான விதிமுறைகளை, போஸ்டர்கள், விளம்பரங்கள் மூலம் மக்களுக்கு புரியும்படி எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது .
5. கடலோரப்பகுதிகளின் செழிப்புத்தன்மையை மேம்படுத்துவதற்காக பல பாதுகாப்பு திட்டங்களை வகுத்துக் கொடுத்திருக்கிறது.
இயற்கையோடு தோழமை கொள்வோம், இயற்கையை அரவணைத்து கொண்டு செயல்படுவோம், இயற்கையின் தோள்களில் தலைசாய்த்து இளைப்பாறுவோம், இதனைப் புரிந்து கொண்டு நடந்தால் நாளைய தலைமுறைக்கு ஒரு அழகிய, அருமையான புவியைக் கொடுக்க முடியும்.
வாருங்கள் சுற்றுப்புறத்தை பாதுகாப்போம்! இயற்கையை நேசிப்போம்!! இந்த பூமியைக் காப்பாற்றுவோம்!!!
Subscribe to:
Posts (Atom)