தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் (Indian Rivers Inter-link) என்பது இந்தியாவிற்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் ஓர் அரசுத் திட்டம் ஆகும். இதன் மூலம் வெள்ளக் காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் உபரி நீரை நாட்டின் மற்ற வறண்ட பகுதிகளுக்குத் திருப்பிவிடும் உன்னதத் திட்டமாகும்.
பொருளடக்கம்
வரலாறு
இந்திய அரசின் தேசிய நீர்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நீர்வள மேம்பாட்டு ஆணையம் (அ) தேசிய நீர் மேம்பாட்டு முகவாண்மை (National Water Development Agency) இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ந்து வருகிறது.
கடந்த 1972 ஆம் ஆண்டு மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்த டாக்டர். கே.எல்.ராவ் அவர்களின் சீறிய ஆய்வின் பேரில் முதன் முதலாக கங்கை - காவிரி இணைப்புத் திட்டம் முன் வைக்கப்பட்டது.
கங்கை - காவிரி இணைப்புத் திட்டம்
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இரண்டு பகுதிகளாக்ப் பிரிக்கப்பட்டுள்ளன[1].
- இமாலய ஆறுகள் திட்டம்
இமயமலையிலிருந்து பாயும் ஆறுகளான கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆகியவற்றை இணைப்பது, கிழக்கு நோக்கிப் பாயும் கங்கை நதியை மகாநதி ஆறுடன் இணைப்பது.
- தீபகற்ப ஆறுகள் திட்டம்
இந்திய தீபகற்பத்தின் வடக்கிலுள்ள மகாநதி மற்றும் கோதாவரி ஆறுகளை தெற்கிலுள்ள கிருஷ்ணா மற்றும் காவேரிஆறுகளுடன் இணைப்பது.
மேற்கு நோக்கி பாயும் ஆறுகளை இணைத்து அரபிக் கடலில் கலக்கும் உபரி நீரை கிழக்குப் பகுதியில் உள்ள வறண்ட பகுதிகளுக்குத் திருப்பி விடுவது.
பயன்கள்
விவசாயத்தை நம்பி உள்ள இந்திய நாட்டில் நீர்ப்பாசனத்திற்கு பெரும்பான்மையான விவசாயிகள் பருவ மழையையே நம்பியுள்ளனர். பருவமழை பொய்த்துப் போகும் காலங்களில் வறட்சி ஏற்பட்டு உணவு உற்பத்திப் பாதிக்கப்படுகிறது. அதே காலத்தில் மற்ற பகுதிகளில் அதிக அளவு மழை பொழிந்து ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு உபரி நீர் வீணாக கடலில் சென்று கலக்கின்றது.
இப்படி வீணாகும் நீரை வறண்ட பகுதிகளுக்குத் திருப்பிவிடுவதன் மூலம் பொதுமக்களுக்குக் குடிநீர் வசதியும், விவசாயத்திற்கான பாசன வசதியும் பெறமுடியும்.
திட்ட முன்னேற்றம்
தேசிய அளவிலான நதிநீர் இணைப்புத் திட்டத்தில் இன்னும் எந்தவிதக் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் எற்படவில்லை.
ஆனால் மாநில அளவில் நதிகளை இணைப்பதற்கான முயற்சிகள் அந்தந்த மாநில அரசுகளினால் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.
குஜராத் அரசு தனது மாநிலத்தில் பாயும் ஆறுகளை இணைக்கும் முயற்சியை ஆரம்பித்து அதில் வெற்றியும் பெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசு தனது மாநிலத்தில் பாயும் ஆறுகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்துவிட்டது.
தடைக்கற்கள்
தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள கால தாமதத்திற்காகச் சொல்லப்படும் காரணங்கள்:
- இதற்குத் தேவையான மிகப் பெரிய செலவுத் தொகை
- இமாலய நதிகளை இணைப்பதை ஆட்சேபிக்கும் அந்நதிகளினால் பயன்பெறும் அண்டை நாடுகள்
- சுற்றுச் சூழல் மற்றும் மக்களுக்கான பாதிப்பு
- மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு
தமிழக நதிநீர் இணைப்புத் திட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழக நதிநீர் இணைப்புத் திட்டம் என்பது இந்திய மாநிலமான தமிழகத்தில், மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை கால்வாய்கள் மூலம் இணைத்து, மழைக் காலங்களில் வீணாக கடலில் கலக்கும் உபரி வெள்ளநீரை வறட்சிப் பகுதிகளுக்கு வழங்கும் திட்டம் ஆகும்.
பொருளடக்கம்
தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம்
மழைக் காலங்களில் அணைகளில் போதிய நீரை சேமித்து வைத்தாலும், தாமிரபரணி மற்றும் அதன் துணை ஆறுகளிலிருந்து 13.8 டி.எம்.சி (அ) 13,800 மில்லியன் கனஅடி நீர் வீணாக கடலில் கலக்கிறது.
திருநெல்வேலியிலிருந்து தாமிரபரணியின் உபரி நீரை ராதாபுரம், நாங்குநேரி போன்ற வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல ரூ.369 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன
இத்திட்டத்திற்கு வெள்ளநீர் கால்வாய் திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
வெள்ளநீர் கால்வாய் திட்டம்
தமிழகத்தின் முதல் நதிநீர் இணைப்புத் திட்டமாகக் கருதப்படும் இத் திட்டத்தின்படி, தாமிரபரணி ஆறு, கருமேனி ஆறு,நம்பியாறு, பச்சையாறு, கோரையாறு, எலுமிச்சையாறு ஆகிய 6 நதிகள் இணைக்கப்படுகின்றன.
இதன் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 23040 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுவதுடன் 50 கிராமங்கள் பயன்பெறும்.
இதன் முதல் கட்டப் பணிகள் 21 பிப்ரவரி 2009 அன்று தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்படி, கன்னடியன் கால்வாயை அகலப்படுத்தி, திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே கன்னடியன் கால்வாயின் 3-வது அணைக்கட்டிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் எம்.எல். தேரி வரை 73 கி.மீ. தொலைவுக்கு வெள்ளநீர் கால்வாய் வெட்டப்படுகிறது. இதனால் சாத்தான்குளம் வட்டம், சுப்புராயபுரத்தில் 2 டி.எம்.சி (அ) 2 மில்லியன் கனஅடி நீரை சேமித்து வைக்கும் வகையில் 2 அணைக்கட்டுகள் கட்டப்படுகின்றன.
இத்திட்டப் பணிகள் 2012ஆம் ஆண்டு முடியும்.
தடைக்கற்கள்
எதிர்காலத்தில் வெள்ளக் காலங்களில் மட்டுமல்லாமல், எல்லா காலங்களிலும் நீரை பங்கிட வேண்டிய சூழ்நிலை வரலாம் என்ற அச்சத்தின் காரணமாக கன்னடியன்கால்வாய் விவசாயிகள் சங்கத்தினர் இத்திட்டதிற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
காவிரி - குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டம்
இத்திட்டத்தின்படி, காவிரி, அக்னியாறு, தென்வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை, குண்டாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் 4 டி.எம்.சி (அ) 4 மில்லியன் கனஅடி நீரை சேமித்து வைக்கலாம். இதன் திட்ட மதிப்பு ரூ. 2,180 கோடி ஆகும். இத்திட்டம் பல கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது.
முதல் கட்டமாக காவிரி-கட்டளைக்கால்வாய் ஆகியவற்றை இணைக்க ரூ.189 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முதல் கட்டப் பணிகள்
காவிரியின் குறுக்கே கட்டளையில் கதவணை கட்டும் திட்டத்தினை நிறைவேற்றிட 24 ஜூன் 2008 அன்று பணிகள் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டம் மாயனூரையும், நாமக்கல் மாவட்டம் சீலைப்பிள்ளையார் புதூரையும் இணைக்கும் வகையில், மாயனூர் காவிரியாற்றில் படுகையணையை கதவணையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதன் முதல் 1.4 டி.எம்.சி (அ) 1.4 மில்லியன் கனஅடி நீரை சேமித்து வைக்கலாம்.
இத்திட்டப் பணிகள் 2011ஆம் ஆண்டு முடியும்.
தென்பெண்ணை - செய்யாறு இணைப்புத் திட்டம்
இத்திட்டதிற்கான தயாரிப்பு வேலைகள் நடைபெற்றுவருகின்றன.
No comments:
Post a Comment