Pages

Saturday, June 6, 2015

அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டம்

- நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான இலவச கல்வி அளிப்பது மத்திய மாநில
அரசுகளின் கடமையாகும்
- அரசுகள் தன் கடமையிலிருந்து தவறிவிட்டது
- அரசு பள்ளிகளிளின் கல்விதரம் படுபாதாளத்தில் உள்ளது
- தனியார் பள்ளியைச் சார்ந்து இருக்க வேண்டிய சூழல் திணிக்கப்படுகிறது
- கல்வி வியாபாரம் மயமாகிவிட்டது
- விரைவாக அதிக பணம் ஈட்டும் வியாபார துறை இன்று கல்வி துறையாகும்



- 100% இலவச கல்வி அளிக்க வேண்டிய அரசுகள் இன்று கண் துடிப்பாக RTE
எனப்படும் கட்டாய கல்வி சட்டத்தை இயற்றயுள்ளது

- 2011ம் ஆண்டு முதல் இச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை
மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கப்படுகிறது

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி
- இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் மூலம் தனியார் மெட்ரிக் மற்றும் CBSE /
ICSE பள்ளிகளில் ஏழை மாணவர்கள் கல்வி கட்டணம் எதுவும் இன்றி 8-ம் வகுப்பு
வரை இலவசமாக கல்வி பயிலுவதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் 25% இடங்கள்
ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான கல்வி கட்டணத்தை மத்திய மாநில
அரசாங்கங்கள் செலுத்திவிடும்.

- இச்சட்டத்தின் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏழை மாணவர்களுக்கென
தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், பெற்றோர்களிடம்
சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் பெரும்பாலான பள்ளிகூடங்கள் ஏழை
மாணவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்தவில்லை.


- எந்தெந்த பள்ளிகளில் சேர்க்கலாம்?
- அனைத்து மெட்ரிக், CBSE/ICSE தனியார் சுயநிதி பள்ளிகள் (சுயநிதி
சிறுபான்மை பள்ளி நீங்கலாக),


- LKG மற்றும் முதல் வகுப்பு - ஒரு கி.மீ சுற்றளவிற்குள் அமைந்த பள்ளிகள்.
- ஆறாம் வகுப்பு - மூன்று  கி.மீ சுற்றளவிற்குள் அமைந்த பள்ளிகள்


- விண்ணப்பங்கள் எங்கு பெறலாம்?
- பள்ளி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்
அலுவலகம்  மற்றும் துவக்க கல்வி அலுவலகம்.


- விண்ணப்பிக்க கடைசி நாள்: 18. 05. 2014

- யாரெல்லாம் பயன்பெற முடியும்?
- 2 லட்சத்திற்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள நலிந்த பிரிவைச்
சேர்ந்தவர்களின் குழந்தைகள், அனாதைகள், எஸ்.சி, எஸ்.டி, எம்.பி.சி ,
பி.சி வகுப்பினர், திருநங்கைகள், எச் ஐ வியால் பாதிக்கப்பட்டோர்,
துப்புரவாளர்கள், மாற்று திறனாளிகள் மற்றும் விதவைகளின் குழந்தைகள்.


- தேவையான ஆவணங்கள் என்ன?
- வருமான சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் பிறப்பு சான்றிதழ்.

- மேலதிக விபரம் மற்றும் புகார்களுக்கு:
- Directorate of Matriculation Schools
- தொலைபேசி: 044 - 28270169
- SMS: 9442144401, 9443574633
E-mail : dmschennai2010@gmail.com
By
Thoufeeq Ahamed m.com,M.A.journalist.
State committee member
campus front of india
Tamilnadu.

No comments:

Post a Comment