Pages

Saturday, June 6, 2015

நதிகள் இணைப்பு என்ற கானல் நீர் திட்டங்கள்

நதிகள் இணைப்பு என்ற கானல் நீர் திட்டங்கள்
கிருஷ்ணன் ரஞ்சனா
ராகுல் காந்தி  தமிழ்நாடு விஜயத்தின் போதுநதி நீர் இணைப்பு பற்றி தன் தெளிவான கருத்தைவெளியிட்டார். "கங்கை-காவிரி இணைப்பு சாத்தியமற்றது." என்றும் நதிகள் இணைப்பு மிகுந்த யோசனைக்கு பிறகு,எச்சரிக்கையுடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார். இப்படி பேசுவதற்கெல்லாம் மிகுந்த தைரியம் வேண்டும் என்று புல்லரித்துக் கொண்டனர் ஜி.கே .வாசனும்,தங்க பாலுவும். தர்ம சங்கடத்திற்கு ஆளான கலைஞர் நதிகள் இணைப்பு மத்திய அரசின் வரையறை திட்டத்தில் உள்ளது என்று கூறபதறிப் போன காங்கிரஸ் தலைவர்கள் கலைஞரை சாந்தப்படுத்த இது ராகுல் காந்தியின் தனிப்பட்ட கருத்து தான் என ஓங்கி ஒலித்தனர்.
இவ்வாறு பதிலளிக்க எந்த தைரியமும் தேவையில்லைமாறாக போதுமான அறிவும்விழிப்புணர்வும் இருந்தால் போதுமானது. ஆண்டாண்டு காலமாக நீரை அடிப்படையாக கொண்டு வரையறுக்கப்படும் திட்டங்கள் இயற்கைக்கு மாறாகவோ அல்லது அரசியில் பிரச்சனையாக நீடித்து இருக்கும் பொருட்டோதீட்டப் படுகிறது.இப்போதெல்லாம் நதி நீர் பிரச்சனை என வரும் போது பிறந்தகுழந்தையும் பதில் கூறும் அளவு காவிரிப் பிரச்சனையை இந்த அரசியில் வாதிகள் வளர்த்திருக்கிறார்கள் என்றால் அவர்களை மனமாற பாராட்டியே ஆக வேண்டும்.
பத்து வருடங்களுக்குள் அனைத்து நதிகளும் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதி மன்ற கருத்தும்வடி நில பகுதிகளை மாற்றி அமைத்தல் போன்ற பொதுபணித் துறை வேலைகளும்இயற்கை விதிகளுக்கு மாறாகவும்கடுமையான பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்விதமாகவும் அமைகின்றன.மத்திய அரசின் 9வது ஐந்தாண்டு திட்டம் நதி நீர் இணைப்பு பற்றி மூச்சே விடவில்லை10வது திட்டமும் வாய் திறக்கவில்லை. பிரதமர் தனது உரையில் தேசிய நீர் கொள்கையை மட்டுமே அறிவித்தார்இது நதிகள் இணைப்பு பற்றி அல்லநதிகள் இணைப்பு என்பது பல்வேறு அமைச்சகங்களின் ஒத்துழைப்பை பொறுத்ததுசுற்றுச் சூழல் அமைச்சகம்,பிற அமைச்சகங்களின் விதிமுறைகளை மதித்து தன்னை உருமாற்றி திட்டத்தை செயல் படுத்த வேண்டும்பிற மாநிலங்களின் ஒத்துழைப்பு இங்கு மிக அவசியம். ஒத்துழைப்பு என்பதுஅரசியல் சூறாவளியில் காணாமல் போகும் வாய்ப்பே அதிகம் உள்ளது.
19ம் நூற்றாண்டின் இறுதியில் ‘கால்வாய் மாலை’ என்றொரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.இதன்படி தென் இந்திய நதிகளை ஒன்றிணைப்பது என்று வரையறுக்கப்பட்டது.சர்ஆர்தர் கார்டன் என்பவர் இத்திட்டத்தைச் செயல்படுத்த முன் வந்தார். பல்வேறு கால் வாய்களை தோண்டி அதன்மூலம் நதிகளை ஒன்றிணைத்து அதில் கப்பலை மிதக்க விடுவது தான் அவரது திட்டம்இவ்வாறான கப்பல் போக்குவரத்து வணிகத்தை மேம்படுத்தும்அதற்காக அமைக்கப்பட்ட கமிஷன் கால்வாய் போக்குவரத்தைக் காட்டிலும், ரயில் போக்குவரத்து செயல் படுத்த மிகவும் எளிது, செலவும் குறைவு, சுற்றுச் சூழல் பாதிப்பும் அதிகம் கிடையாது என்று காரணங்களை கூறி அத் திட்டத்தை கைவிட்டதுஇதற்காக தோண்டப்பட்ட கால்வாய்கள் நம் அரசியல்வாதிகளின் கண்படும்வரை மழை நீர் சேமிக்கவும், பல பறவைகளின் பருவ கால சுற்றுலா தளமாகவும் இருந்து வந்தது.ஆக்கிரமிப்பாலும்
அலட்சியத்தாலும் தற்போது தூர்ந்து போனது
.

ராமசாமி ஐயர் தனது water perspectives,issues concerns புத்தகத்தில் linking of rivers: vision or mirage பாகத்தில் ஆறுகளை இணைப்பதோ அணைகட்டுஅமைப்பதோ இயற்கையை நாம் மிக கேவலமான வார்த்தைகளை கொண்டும்,ஒழுங்கீனமான செயல் பாடுகளாலும் கோபமூட்டுகிறோம் .அதன் முழு கோபத்தை நம்மால் தாங்க முடியாது என்று எச்சரித்தார்அவரின்வார்த்தைகளை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லைஅவரின் வாக்கு பலித்தது சுனாமி வந்ததுஎனினும் நம் அலட்சிய போக்கு விட்ட பாடில்லை.
கங்கை-காவிரி இணைப்பில் வட மாநிலங்கள் ஆர்வம் காட்டவில்லை.இன்னும் கூறப் போனால் பீகார் போன்றவை தாங்கள் கங்கையின் ஒரு சொட்டு நீரை கூட அனுபவிக்கவில்லை என குறை கூறுகின்றனமேற்கு வங்கம் இதே குறையை கூறி இந்திய வங்க தேச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு வலியுறுத்துகிறது. தேசிய நதி நீர் விரிவாக்க ஆணையம் தனது அறிக்கையில்,1982ல் உருவாக்கப்பட்ட குழு வடிநில பகுதிகளை ஆராய்ந்து எங்கு அதிக நீர் நதிகள்மூலம் வருகிறது ,எங்கு குறைந்து வருகிறது என்பதை கண்டறிந்து அவற்றிர் கேற்ப நீர்நிலை தேக்கங்களை உருவாக்கி நீரை தேக்கி வைப்பதே புத்திசாலி தனம் என்று கூறுகிறதுசென்ற மாதம் பேசிய மன்மோகன் சிங்கும் இதே குரலை பிரதிபலித்தார்.
பொதுவாக இந்திய நதிகளின் அமைப்பு இமய மலையை மையப் படுத்தியே கணிக்கப்படுகிறதுமிக முக்கிய நதிகளான கோதாவரி,மகாநதி நீர் இணைப்பை ஒரிசா,ஆந்திர மாநிலங்கள் ஏற்க மறுக்கின்றனஏனெனில் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளை கிழக்கு நோக்கி திருப்புவது இயற்கைக்கு விரோதமானது மட்டுமல்ல ,கடினமானதும் ஆகும்.இவ்வாறான நடவடிக்கைகளில் சுற்றுச் சூழல் பாதிக்கப் படுவதோடு ஆறே வறண்டு போகும் ஆபத்தும் உள்ளது.இதற்கு உதாரணமாக ரஷ்யாவின் ஆரல் ஏரியை கூறலாம்இவ்வாறான செயல்களை தவிர்த்து ஆறு ஓடும் பகுதிகளை கணக்கிட்டு வடி நிலங்களைஅமைப்பதும்தேவைக்கேற்ப சிறிய நீர் தேக்கங்களை உருவாக்குவதும்நீர் பற்றாக்குறை ஏற்படும்போது அங்கிருந்து எடுத்து உபயோகப்படுத்துவதும்,தேவை குறையும்போது வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்வது சாலச் சிறந்ததுஇது பண்டைய கால அரச நீர் விநியோக முறை‘ எனலாம்.காவிரி பிரச்சனை தீர இவ்வகை நுட்பங்கள் மிக உபயோகமாக இருக்கும்.
சிறு தேக்கங்களை பாறை நிலங்களில் உருவாக்குவது தான் சால சிறந்தது.பாறைகளின் வழியே வடிநீராக வாய்கால் மூலம் ஓடிவரும் நீர் இயற்கையிலேயே கட்டுப் படுத்தப்படுவதுடன் அளவும் குறைக்கப்படுகிறது.மலை தொடர் இருக்கும் எனில்மலையை சுற்றி வாய்க்கால் அமைத்து நீரை கடத்தும் போது மலையும் பாதிக்கப்படாது மலையடிவாரங்களும் வளம் பெறும்இதனால் இங்குவாழும் விலங்குகள் நீர் குடிக்க ஏதுவாகவும் ,ஊருக்குள் நுழைவதும் தடுக்கப்படும்இதையெல்லாம் புறக்கணித்து விட்டுஅரசுஅணைகட்டுதல் மிகப் பெரும் கால் வாய் அமைத்தல்பிரம்மாண்டதேக்கங்களை உருவாக்குதல் என திட்டங்களை தீட்டி அதற்கென ஆணையத்தையும் அமைத்து விட்டது10வது ஐந்தாண்டு திட்டத்தில் இதற்கான நிதி ஒதுக்கீடு 70,000 கோடி ரூபாய் எனவும், 11வது ஐந்தாண்டில்1,10,000 கோடி எனவும் செலவு கணக்கு காட்டுகிறது உச்ச நீதி மன்றமோ எந்த ஒரு அடிப்படை காரணங்களையும் ஆராயாமல் இத்திட்டத்திற்கு 5,60,000கோடி தான் தருவேன்என தன்னிச்சையாக நிர்ணயிக்கிறது.
விந்தைகளுக்கும்சந்தேகங்களுக்கும்கோமாளித்தனங்களுக்குமாக இத்திட்டங்களும்செயல் பாடுகளும் அமைந்து விடுகின்றன.கே,எல்ராவ் என்ற பொறியாளர் கங்கை-காவிரி இணைப்பு சாத்தியப்படும்அதன் மூலம் இந்தியாவை வளம் கொழிக்கும் நாடாக மாற்ற முடியும் என்றார்ஆனால் சர்.ஆர்தர் கார்டன் "இது சாத்தியமற்றதுவிபரீத விளைவுகளை ஏற்படுத்தும் "என்று ஆங்கிலேய அரசுக்குமுன்பே அறிக்கையைசமர்பித்திருக்கிறார்.அதற்கான காரணங்களையும் தெளிவுபட கூறியுள்ளார். "விந்திய மலை தடுப்பரன் மீது 50,000 கன அடி நீரை, 1400 அடி உயரத்திற்கு மின்சார மோட்டார் மூலம் ஏற்றுவதென்பது சாத்தியமற்றது .அவ்வாறே செய்தாலும் 300 அடி உயரம், 750 மீ நீளமும் மலையை வெட்டி எடுக்க வேண்டும்இப்படி செய்வது சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தாதா?" என வினா எழுப்பினார்அசாமில் 200 கி,மீ.,மேற்கு வங்கத்தில் 50 கி.மீமத்திய பிரதேசத்தில் 1000 கி.மீமஹாராஷ்டிரத்தில் 500 கி.மீதமிழ் நாட்டில் 550 கி.மீ,என மொத்தம் 3750 கி.மீ கால் வாய் வெட்டி நீரை கடத்த வேண்டும்இது சாத்தியம் தானா?
சமீபத்தில் தமிழக அரசு வெறும் 76 கி.மீ கால்வாய் வெட்டி அதன்மூலம் கருமேனி ஆறுநம்பிஆறுதாமிரபரணி போன்றவற்றை இணைக்கும் திட்டம்2012 ல் முடிவடையும் ,அதற்கான செலவு 368 கோடி என நமது துணை முதல்வர் திரு. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்இதற்கே இப்படி என்றால் மேற்குறிப்பிட்ட தொலைவை அடைய எவ்வளவு காலமாகும்செலவு என்னவாகும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லைஇயற்கை விரும்புவதே நம்மை வாழ வைப்பதுதான்அறிவியலின் துணையோடும்ஆசை கவிந்த நெஞ்சோடும் இயற்கையை சீண்டிப் பார்ப்பது அழகல்ல.அழிந்து போவோம்.

No comments:

Post a Comment