தேசிய நதிநீர் இணைப்பு திட்டம்
இந்தியாவில் * அனைத்து நதிகளையும் தேசியமயம் ஆக்கி, * இந்திய நதிகளை இணைத்து அதன் மூலம்* தேசிய நீர்வழிச்சாலையை அமைத்தால் வறுமை, வெள்ளம்,வறட்சி,வேலைவாய்ப்பின்மை, மின்சாரத் தட்டுப்பாடு இவை அனைத்திலிருந்தும் விடுதலை.
குடிநீர்: 60 கோடி மக்களுக்கு தடையில்லாமல் காலம் முழுவதும் குடிநீர் கிடைக்கும். / விவசாயம்: 15 கோடி ஏக்கர் நிலங்கள் கூடுதலாக பாசன வசதி பெற்று விவசாயம் சிறக்கும். 2050- ல் தேவையான உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடையும். / நிலத்தடி நீர்: இந்தியாவின் பாதித்த பகுதிகளில் எல்லாம் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
மின்சாரம்: 60000 மெகாவாட் மாசற்ற புனல் மின்சாரம் கிடைக்கும். / வேலை வாய்ப்பு: 25 கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகும். / நீர்வழிச்சாலை: 15000 கி.மீ.நீளத்திற்கு தேசிய நீர்வழிச்சாலை அமையும். சிறிய பயணிகள் கப்பல் நாடு முழுவதும் உலாவரும்.
எரிபொருள்: வருடம் 1,50,000 - கோடி ரூபாய் எரிபொருள் குறைப்பின் மூலம் சேமிக்கப்படும். / உலக வெப்பமயம்: கால்வாய் நெடுகிலும் மரங்கள் வளர்த்தல், புதிய காடுகள் வளர்த்தல் மூலம் நாட்டின் வெப்பம் தணிந்து சுற்றுப்புற சூழல் சீர்படும். / வெள்ளம்: ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கு கட்டுப்பாட்டுக்குல் கொண்டுவரப்படும்.
வறட்சி : வெள்ளநீர் வறட்சிப் பகுதிகளுக்கு கொண்டு செல்வதால் வறுமையும் வறட்சியும் இல்லாமல் போகும். / சுற்றுலா: இந்திய சுற்றுலாத்துறை உலக அளவில் இடம் பிடிக்கும். சாதனை : இந்தியா முழுவதும் நீர்வளம் பெற்று, நிலவளம் சிறப்புறப் பெற்று, வறுமை நீங்கி, 2025 -ல் வலிமைமிகு வல்லரசாய் நாடு உருவாகும். வறட்சி, வறுமை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளுவது முற்றிலும் நீங்கும்.
நதிகள் இணைந்தால் நாடு செழிக்கும்! வாருங்கள் ஒன்றுபட்டு செயல்படுவோம்! உலகில் வலிமைபெற்ற பொருளாதார வல்லரசாக இந்தியாவை மாற்றுவோம்!!
இந்திய நதிகள் இணைப்பு இயக்கத்தின்Group-ல் இணையுங்கள்..
https://www.facebook.com/groups/indianrivers/
இந்திய நதிகள் இணைப்பு இயக்கத்தின்Group-ல் இணையுங்கள்..
https://www.facebook.com/groups/indianrivers/
No comments:
Post a Comment